Editor

வெள்ள அனர்த்த கிருமித் தொற்றால் முல்லையில் சிறுமி உயிரிழப்பு !

முல்லைத்தீவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளப் பாதிப்பினால், சிறுமியின் உடலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரகான் கௌசியா என்ற 9 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சிறுமி உடலில் கிருமி தொற்று சென்றமையினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பெய்த அடைமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், சொந்த இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.

Subscribe to get more videos :