Editor

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று காலை 6.30 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சடலம்,இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மரண விசாரணைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to get more videos :