Editor

சர்வாதிகார ஆட்சியினால் பயனில்லை!

நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை அரசாங்கம் முன்னெடுக்குமாயின், அதனால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஸ தலைமையில் அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற தேர்தல் தொடர்பான கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்திருப்பினும், இக்காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்த அவர், அரசாங்கம் கற்பனை கதைகளை கூறுவதற்கே திறமையானது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் வரவு செலவு திட்டத்தினூடாகவும் அரசாங்கம் மக்களை ஏமாற்ற எண்ணினால், நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் எனும் போர்வையில் அரசாங்கம் மேற்கொள்ளும் சர்வாதிகார ஆட்சியினால் எப்பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to get more videos :