Editor

பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான தேசிய தினம் நாளை மாத்தளை அலுவிகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ,இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், சுமார் 2000 பௌத்த மதகுருமார்கள் மற்றும் வெளிநாட்டு ,ராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் சகல வீடுகளிலும், அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை பறக்க விடுமாறு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to get more videos :